கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்  நடிகர் ரஜினிகாந்த்

‘அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது வீட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

கொரானா 2வது அலையால் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் 4000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை மாநில அரசுகள் கொண்டு வந்துள்ளன.

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்  நடிகர் ரஜினிகாந்த்

ஆனால் இதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கிறது. அதனால் கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்வதை அரசு ஊக்குவித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பிரபலங்கள் மூலம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து பிரபலங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்  நடிகர் ரஜினிகாந்த்

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் முடித்து நேற்றுதான் ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று தனது வீட்டில் கொரானா தடுப்பூசியை நடிகர் ரஜினி செலுத்திக்கொண்டார். அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

Share this story