கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் – நடிகர் ரஜினி வேண்டுகோள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் –  நடிகர் ரஜினி  வேண்டுகோள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகைளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரானா அலை 2வது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரானா தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க தாராள நிதியுதவி அளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் முதல்வர் முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் –  நடிகர் ரஜினி  வேண்டுகோள்

அதன்படி, பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா, 1 கோடி, அஜித் 25 லட்சம், ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா 1 கோடி, ஏஆர் முருகதாஸ் 25 லட்சம், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம், நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம், இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம், ஜெயம் ரவி 10 லட்சம் என தங்களது பங்ளிப்பை செலுத்தியுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் –  நடிகர் ரஜினி  வேண்டுகோள்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தார். அப்போது கொரானா பேரிடர் நிதியாக ரூபாய் 50 லட்சத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகைளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் எனவும் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

Share this story