”ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்” தனது நண்பனுடன் ரஜினி இருக்கும் புகைப்படம் வைரல்

”ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்” தனது நண்பனுடன் ரஜினி இருக்கும் புகைப்படம் வைரல்

நடிகர் ரஜினி தனது நண்பன் மோகன் பாபுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ரஜினி என்றாலே அவரின் ஸ்டைல்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும்.உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரஜினி தனது ஆரம்ப காலக்கட்டத்தில் கர்நாடக அரசு பேருந்தில் நடத்துனராக இருந்து சினிமா துறைக்கு வந்தார்.

”ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்” தனது நண்பனுடன் ரஜினி இருக்கும் புகைப்படம் வைரல்

சினிமா துறைக்கு வருவதற்காக சென்னை திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கல்லூரியில் ரஜினியுடன் படித்தவர்தான் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. இவர்கள் இருவரும் இணைந்துதான் சினிமாவில் வாய்ப்பு தேடினர். அதன்பிறகு ரஜினிகாந்த்துக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார். தெலுங்கு சினிமா பக்கம் சென்ற மோகன் பாபு, அங்கு பெரிய நடிகராக மாறி உச்சம் தொட்டார்.

”ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்” தனது நண்பனுடன் ரஜினி இருக்கும் புகைப்படம் வைரல்

சினிமாவில் இன்றைக்கும் சீனியர்களாக உள்ள ரஜினியும்,மோகன் பாபுவும் நீண்ட நாள் நண்பர்களாக உள்ளனர். வாடா போடா என்று கூப்பிடமளவுக்கு நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் நடிகர் மோகன் பாபு மகன் விஷ்ணு,தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ரஜினியுடன் மோகன் பாபு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ”ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்” என பதிவிட்டுள்ளார். அநேகமாக இந்த புகைப்படங்கள் ‘அண்ணாத்த’ ஷூட்டிங் போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this story