நடிகர் சத்யராஜின் மகளின் உருக்கமான பதிவு
சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சேவை செய்யும் இவர், தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இவரது அம்மா கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவரது அம்மாவுக்கு குழாய் மூலம் தான் உணவு அளிப்பதாகவும் நாங்கள் முற்றிலுமாக உடைந்துவிட்டதாகவும் வேதனையுடன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்க திவ்யா சத்யராஜின் மனைவி பூரண குணமடைய வேண்டினர்.
இந்த நிலையில் திவ்யா சத்யராக் அவரது அம்மா குறித்து மீண்டும் உருக்கமான ஒரு பதிவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கடந்த சில ஆண்டுகளாக அம்மாவின் உடல்நிலை காரணமாக வாழ்க்கை சவாலாக மாறியது. வீட்டில் ஐசியூவை வைத்து கோமா நோயாளியைக் கவனிப்பது கடினமானது. ஆனால் எனது பெற்றோரைப் பாதுகாக்க எது வேண்டுமானாலும் செய்வேன். நானும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் வேதனையான கட்டத்தை கடந்து வருகிறேன். ஆனால் ஊட்டச்சத்து நிபுணராக எனது வெற்றிகரமான வாழ்க்கை என்னை முன்னேற வைத்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகங்களுக்கு சத்தான உணவை வழங்க எனது அரசு சாரா நிறுவனத்தைத் தொடங்குவது எனக்கு புதிய நம்பிக்கையைத் தந்தது மற்றும் நான் குணமடைய உதவியது. விரைவில் நல்ல செய்தியை உங்களுடன் பகிர்வேன்” என்றார்.