முதல்வரை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்.. கொரானா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் அளிப்பு

முதல்வரை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்.. கொரானா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம்  அளிப்பு

முதல்வர் ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் கொரானா நிவாரண நிதி ரூபாய் 25 லட்சத்தை வழங்கினார்.

கொரானாவின் 2வது அலையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக கொரானா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த 14 நாட்கள் ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு. ஆனால் ஊடரங்கை பொருட்படுத்தாமல் மக்கள் வெளியே சுற்றுத்திரிவதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்தன.

முதல்வரை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்.. கொரானா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம்  அளிப்பு

இதையடுத்து இன்று முதல் ஊரடங்கை மேலும் கடுமையாக்கியுள்ளது தமிழக அரசு. அதேநேரம் கொரானாவின் தாக்குதலால் ஏற்படும் நிதி பற்றாக்குறையை போக்க தராள நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

முதல்வரை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்.. கொரானா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம்  அளிப்பு

இதைத்தொடர்ந்து பல முக்கிய சினிமா பிரபலங்கள் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சூர்யா குடும்பம் சார்பில் 1 கோடியும், நடிகர் அஜீத் 25 லட்சமும், கவிஞர் வைரமுத்து 5 லட்சமும், இயக்குனர் ஷங்கர் 10 லட்சமும், இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சமும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கொரானா பேரிடர் நிதியாக ரூபாய் 25 லட்சத்தை வழங்கினார். இதேபோன்று பல சினிமா நட்சத்திரங்களும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

Share this story