தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா நடிகர் சூர்யா…?

surya

நடிகர் சூர்யா நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து 2025 மே 1 அன்று இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் மலையாள இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

surya
 இந்நிலையில் நடிகர் சூர்யா, நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது நடிகர் சூர்யாவிற்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க தான் விரும்புவதாக சூர்யா, பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் தான் கார்த்திகேயா படத்தின் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் உலா வந்த நிலையில் தற்போது இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

surya
அதாவது சந்து மொண்டேட்டி சமீபத்தில் பேசிய போது, “நான் இயக்கியிருந்த கார்த்திகேயா 2 திரைப்படம் நடிகர் சூர்யாவிற்கு மிகவும் பிடித்தது. எனவே அவர் என்னுடன் படம் பண்ண வேண்டும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதன்படி நானும் சூர்யாவிடம் இரண்டு கதைகளை சொல்லி இருக்கிறேன். அந்த இரண்டு கதைகளும் சூர்யாவிற்கு மிகவும் பிடித்திருக்கிறது. இறுதியாக அவர், இரண்டில் ஏதேனும் ஒரு கதையை தேர்வு செய்வார்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் சூர்யா, சந்து மொண்டேட்டி ஆகியோரின் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story