'கேம் சேஞ்சர்' பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நடிகர் விஜய்?

vijay

‘கேம் சேஞ்சர்’ விழாவுக்கு சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை பல்வேறு மாநிலங்களில் விளம்பரப்படுத்தும் பணி தொடங்கியிருக்கிறது. இன்று ராஜமுந்திரியில் பவன் கல்யாண் உள்ளிட்ட ஒட்டுமொத்த சிரஞ்சீவி குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளும் பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.game changer

சென்னையில் இதே போன்று பிரம்மாண்ட விழா ஒன்று ஜனவரி 7-ம் தேதி நடத்த படக்குழு தீர்மானித்திருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள விஜய்க்கு அழைப்பு விடுத்திருக்கிறது படக்குழு. விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தினை தயாரித்தவர் தில் ராஜு, மேலும் ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்திலும் விஜய் நடித்திருப்பதால் ‘கேம் சேஞ்சர்’ விழாவில் விஜய் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறார்கள்.ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கைரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Share this story