புதுமணத் தம்பதி இயக்குனர் அஜய் ஞானமுத்து – ஷிமோனாவை சந்தித்து வாழ்த்திய நடிகர் விஷால்

vishal

இயக்குனர் அஜய் ஞானமுத்து – ஷிமோனா தம்பதியை நடிகர் விஷால் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அஜய் ஞானமுத்து. இவர் ஆரம்பத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதன் பின்னர் இவர் அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் திரில்லர் படமான டிமான்ட்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராகம் உருவெடுத்தார். முதல் படத்திலேயே பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுக்களை பெற்றார் அஜய் ஞானமுத்து. அதன் பின்னர் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோரின் நடிப்பில் இமைக்கா நொடிகள் எனும் திரைப்படத்தை இயக்கி மீண்டும் வெற்றி கண்டார்.

ajay

அதன் பின்னர் இவர் நடிகர் விக்ரமை வைத்து கோப்ரா திரைப்படத்தை இயக்க இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து இவர், டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தை இயக்கி கம்பேக் கொடுத்தார். அடுத்தது இவர் நடிகர் விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர், பூஜா ஹெக்டே நடிப்பில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

vishal

இந்நிலையில் தான் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது நீண்ட நாள் காதலி ஷிமோனாவை சென்னையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. அதேசமயம் நடிகர் விஷால், அஜய் ஞானமுத்து – ஷிமோனா தம்பதியை அவர்களின் இல்லத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 

Share this story