உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஷ்ணு விஷால்… எம்.எல்.ஏ ஆனதற்கு வாழ்த்து!…

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஷ்ணு விஷால்… எம்.எல்.ஏ ஆனதற்கு வாழ்த்து!…

நடிகர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நடிகர் விஷ்ணு விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. திமுக கூட்டணி 159 இடத்திலும், திமுக மட்டும் 125 தொகுதிகளில் தனி மெஜாரிட்டியுடன் ஜெயித்தது. திமுக வெற்றிக்கு காரணமாக ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஷ்ணு விஷால்… எம்.எல்.ஏ ஆனதற்கு வாழ்த்து!…

இதையடுத்து நேற்று கவர்னர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் தமிழகத்தின் 23வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் உடனடியாக கொரானா பணியில் உடனடியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியல், சினிமா என இரு துருவங்களும் பயணித்து வருகிறார். அதனால் இரு துறை சார்ந்தவர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் உதயநிதியை இன்று நேரில் சந்தித்து நடிகர் விஷ்ணு விஷால் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு, “விடிவெள்ளி தான் முளைக்கும் வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா, கிழக்கு முகம் வெளுத்ததனால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு” என்று தெரிவித்துள்ளார்.

Share this story