கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்..!
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த 12ஆம் தேதி, 15 வருட காதலரான ஆண்டனி தட்டிலுடன் இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதுதொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதில், ஆண்டனி தட்டில் தாலி கட்டிய போது கீர்த்தி சுரேஷ் ஆனந்த கண்ணீர் வடித்தார். கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற புடவையும், ஆண்டனி தட்டில் பஞ்சகச்ச உடையும் அணிந்திருந்தனர்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ்க்கு ஆண்டனி தட்டிலுடன் கிறிஸ்துவ முறைப்படி, ஒருமுறை திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்பதாலும் ஆண்டனி தட்டில் கிறித்துவ மதத்தை சார்ந்தவர் என்பதாலும் இந்து முறைப்படியும் கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.