ஷூட்டிங் என்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை – பூஜா ஹெக்டே ஆதங்கம்…

ஷூட்டிங் என்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை – பூஜா ஹெக்டே ஆதங்கம்…

ஷூட்டிங்கில் நடிக்கும்போது என்னால் சுதந்திரமாக இருக்கமுடியவில்லை என நடிகை பூஜா ஹெக்டே தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

ஷூட்டிங் என்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை – பூஜா ஹெக்டே ஆதங்கம்…

விஜய் – நெல்சன் கூட்டணியில் வேகமாக உருவாகிறது தளபதியின் 65வது படம். பெயரிடாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. கிட்டதட்ட எடுக்கவேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இதையடுத்து படக்குழுவும் விரைவில் சென்னை வரவிருக்கிறது.

ஷூட்டிங் என்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை – பூஜா ஹெக்டே ஆதங்கம்…

இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கொரானா நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. முன்புபோல் தற்போது எங்கேயும் ஜாலியாக ஊர் சுற்றமுடியவில்லை. கொரானா தொற்றுக்கு அனைவரும் சமம். ஏழை, பணக்காரன் என வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் தாக்குகிறது. அதனால் மாஸ்க் அணிவது மிக முக்கியம் என கூறினார்.

ஷூட்டிங் என்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை – பூஜா ஹெக்டே ஆதங்கம்…

மேலும், சாதாரண மக்கள் குடும்பத்தோடு வீட்டில் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எங்கள் பணியின் காரணமாக படப்பிடிப்பில் இருக்கிறோம். எனக்குள் எதோ இனம்புரியாத பயம் பின்தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. வெளியே செல்லவும் முடியவில்லை, அதேநேரம் ஷூட்டிங்கில் சுதந்திரமாக இருக்கவும் முடியவில்லை. முக கவசம் இல்லாமல் வாழும் வாழ்கை எப்போது வரும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share this story