கேங்ஸ்டராக மாறும் பிரியாமணி… ‘கொட்டேஷன் கேங்’ புதிய அப்டேட் !

கேங்ஸ்டராக மாறும் பிரியாமணி… ‘கொட்டேஷன் கேங்’ புதிய அப்டேட் !

பிரியாமணி நடிக்கும் ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

கேங்ஸ்டராக மாறும் பிரியாமணி… ‘கொட்டேஷன் கேங்’ புதிய அப்டேட் !

வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை பிரியாமணி. ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நன்கு அறிமுகத்தை பெற்ற இவர் நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ‘நாரப்பா’, ‘விராட்டா பர்வம்’, ‘சயனைடு மோகன்’ உள்ளிட்ட பல படங்களை பிரியாமணி கைவசம் வைத்துள்ளார் .

கேங்ஸ்டராக மாறும் பிரியாமணி… ‘கொட்டேஷன் கேங்’ புதிய அப்டேட் !

இந்த படங்களை அடுத்து விவேக் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். மும்பையில் நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகிறது. ‘கொட்டேஷன் கேங்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷ்ணு வாரியர், சதீந்தர், அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கராந்தே, ஷெரீன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுனுவும் நடிக்க உள்ளார்.

கேங்ஸ்டராக மாறும் பிரியாமணி… ‘கொட்டேஷன் கேங்’ புதிய அப்டேட் !

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜை போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகை பிரியாமணி, இந்த படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. மேலும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால், அதற்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

Share this story