ஓவர் கிளாமரில் ரம்யா பாண்டியன்... இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்

ramya pandian

உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார். 

ramya pandian

ஒரேயொரு போட்டோஷூட்டால் மட்டும் மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொட்டை மாடி ஒன்றில் இடுப்பு தெரியுமளவிற்கு போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டார் ரம்யா பாண்டியன். இணையத்தில் வேகமாக வைரலான அந்த புகைப்படங்கள் ஓவர் நைட்டில் ரம்யா பாண்டியனை பிரபலமாக்கியது. 

ramya pandian

இந்த பிரபலத்தை வைத்து விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் நிகழ்ச்சி முடியும் தருவாயில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றே வெளியேறினார்‌. 

ramya pandian

 சின்னத்திரையை தவிர்த்து ஜோக்கர், டம்மி பட்டாசு, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் படத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழில், ‘இடும்பன்காரி’ படத்திலும், மலையாளத்தில் மம்முட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

ramya pandian

இந்நிலையில் தனது‌ ரசிகர்களுக்காக அடிக்கடி போட்டோஷூட்களை ரம்யா வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்து வருகின்றனர். 

ramya pandian

Share this story