திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!

திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக வந்து ரசிகர்கள் மனதில் நீங்கா படம் பிடித்தவர் சாய் பல்லவி. அதையடுத்து மலையாத்தில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த சாய் பல்லவி ‘மாரி 2’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து சூர்யா உடன் ‘என்ஜிகே’ படத்தில் நடித்தார். பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பாவக் கதைகள்’ அந்தாலஜி படத்தில் நடித்தார்.

திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!

தற்போது தெலுங்கின் முன்னணி நடிகையாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். நாகசைதன்யா உடன் லவ் ஸ்டோரி, ராணா உடன் விரத பர்வம், நானி உடன் ஷியாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

லாக்டவுன் ஆரம்பித்தது முதல் சாய் பல்லவி அரிதாகவே சமூக வலைத்தளங்களில் காணப்படுகிறார். இந்நிலையில் சாய் பல்லவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!

நண்பர்கள், சகோதரி, மற்றும் உறவினர்கள் சூழ இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவர் ‘மாதுவ் ஸ்குவாட்’ என்று தெரிவித்துள்ளார். சாய் பல்லவியின் தாய் மொழியான படுகா மொழியில் மாதுவே என்றால் திருமணம் என்று அர்த்தம். எனவே நண்பரின் திருமணத்திற்காக அவரின் சொந்த ஊரான நீலகிரியில் ஒன்று கூடியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!
திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!
திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!
திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!

Share this story