நீண்ட கால நண்பரை கரம் பிடித்தார் நடிகை சாக்ஷி அகர்வால்...!
நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து போட்டோஷூட் வெளியீட்டே ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வால், தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து புரவி, தி நைட், குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன.
From childhood friends to soulmates 💍✨ Under the Goan skies, Navneet and I said ‘forever’ amidst love and waves 🌴❤️ 🥂 Here’s to a lifetime of love, laughter, and endless memories. 💍✨#NakshBegins #SakshiWedsNavneet #ChildhoodToForever pic.twitter.com/XuSKHjZb2f
— Sakshi Agarwal (@ssakshiagarwal) January 3, 2025
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சக்ஷி அகர்வால், தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சாக்ஷிக்கு திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. கோவாவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்து வந்த நவனீத் மிஸ்ரா என்பவரை தான் சாக்ஷி தற்போது காதலித்து கரம்பிடித்து இருக்கிறார். சர்ப்ப்ரைசாக அவர் போட்டோக்களை வெளியிட்ட நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.