விஜய் மகன், மகள் பெயரில் போலி கணக்கு.. உஷாராக இருக்கும்படி வேண்டுகோள் !

விஜய் மகன், மகள் பெயரில் போலி கணக்கு.. உஷாராக இருக்கும்படி வேண்டுகோள் !

விஜய் மகன், மகள் பெயரில் போலி கணக்கு ஆரம்பித்துள்ளதால் ரசிகர்கள் உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விஜய் மகன், மகள் பெயரில் போலி கணக்கு.. உஷாராக இருக்கும்படி வேண்டுகோள் !

தமிழ் சினிமாவின் நெம்பர் ஒன் ஹீரோக்களில் எப்போதுமே நடிகர் விஜய்க்கு முக்கிய இடம் உண்டு. நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனது சிறப்பான நடிப்பால் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவர் படங்கள் பெரும்பாலும் 100கோடி மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படம் 250 கோடி வசூலித்தது. இதையடுத்து தற்போது நெல்சன் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

விஜய் மகன், மகள் பெயரில் போலி கணக்கு.. உஷாராக இருக்கும்படி வேண்டுகோள் !

தனது கடுமையான உழைப்பால் உயர்ந்த விஜய், குடும்பத்தினர் மீது அதிக அக்கறைக் கொண்டவர். நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளார். விஜய்யின் மகன் கனடாவில் திரைப்பட கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு இயக்குனராகவோ அல்லது நடிகராக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மகன், மகள் பெயரில் போலி கணக்கு.. உஷாராக இருக்கும்படி வேண்டுகோள் !

இந்நிலையில் நடிகர் விஜய் மகன் மற்றும் மகள் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டு அதில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது. இதை நம்பி ஏராளமான ரசிகர்கள் அந்த ட்விட்டர் கணக்கை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த கணக்குகள் முற்றிலும் போலியானவை. விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் எந்த சமூக ஊடகங்களிலும் கணக்கு இல்லை. இதை பின் தொடரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரசிகர்கள் தயது செய்து எச்சரிக்கையாக இருக்கும்படி விஜய் தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this story