அதிதீ சங்கரின் அதிரடி பதிவு; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.

photos

‘மாவீரன்’ படம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு படத்தின் நாயகி அதிதீ சங்கர்  அதிரடி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

photos

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதீ சங்கர், முதல் முறையாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் ‘விருமன்’ அந்த படத்தில் நடிகர் கார்த்தியுடம் ஜோடி போட்டு நடித்து அசத்தியிருப்பார். அதை தொடர்ந்து அதிதீ இரண்டாவதாக சிவகார்த்திக்கேயனின் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

photos

படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்த சமயத்தில் படத்தின் படபிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகவும், நாயகன் சிவகார்த்திக்கேனிற்கும் , படத்தின் இயக்குநர்  மாடோன் அஸ்வினிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் தீயாக பரவியது. இந்த நிலையில் அது முற்றிலும் தவறான தகவல் என்று படத்தின் இயக்குனரே அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

photos

 இந்த நிலையில் தற்பொழுது அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நடிகை அதிதீ சங்கர், சர்ச்சைகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share this story