விபத்தில் சிக்கிய தல அஜித்…பைக் ஸ்டண்ட் செய்தபோது நடந்த விபரீதம்!

விபத்தில் சிக்கிய தல அஜித்…பைக் ஸ்டண்ட் செய்தபோது நடந்த விபரீதம்!

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஹெச்.வினோத்.
இவர் தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார்.

விபத்தில் சிக்கிய தல அஜித்…பைக் ஸ்டண்ட் செய்தபோது நடந்த விபரீதம்!

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விபத்தில் சிக்கிய தல அஜித்…பைக் ஸ்டண்ட் செய்தபோது நடந்த விபரீதம்!

என்னை அறிந்தால் படத்திற்குப் பின் மீண்டும் அதிரடியான போலீஸ் அதிகாரியாக தல அஜித் நடிப்பதால் கடுமையான உடற் பயிற்சிகளில் ஈடுபட்டு மிகவும் இளமையான தோற்றத்திற்கு தல அஜித் மாறியுள்ளார்.

விபத்தில் சிக்கிய தல அஜித்…பைக் ஸ்டண்ட் செய்தபோது நடந்த விபரீதம்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கிய படப்பிடிப்பு சென்னை ஹைதராபாத் என மாறி, மாறி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய தல அஜித்…பைக் ஸ்டண்ட் செய்தபோது நடந்த விபரீதம்!

பின்னர் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இதில் தல அஜித் கலந்துகொண்டு அவர் சம்பந்தமான காட்சிகளில் நடித்து வந்தார்.
அப்போது பைக் ஸ்டாண்ட் செய்யும் காட்சிகளை தல அஜித் வழக்கம்போல டூப் இல்லாமல் அவரே செய்துள்ளார்.

விபத்தில் சிக்கிய தல அஜித்…பைக் ஸ்டண்ட் செய்தபோது நடந்த விபரீதம்!

அவ்வாறு பைக் ஸ்டாண்டில் ஈடுபட்டபோது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்ததாகவும், அதில் அவருக்கு கை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய தல அஜித்…பைக் ஸ்டண்ட் செய்தபோது நடந்த விபரீதம்!

பின்னர் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் ஹைதராபாத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Share this story