வெறித்தனம் செய்துள்ள தல... பட்டையை கிளப்பும் ‘துணிவு’ டிரெய்லர் வெளியீடு !

thunivu

 அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் தாறுமாறான டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

‘வலிமை’ படத்திற்கு அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் வழக்கம் போல் பெப்பர் சால்ட் லுக்கில் மாஸாக நடித்துள்ளார். இந்த படம் அஜித்தின் வழக்கமான படம் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். 

thunivu

இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த படத்தை கைப்பற்றியுள்ள ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. நேற்று இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

thunivu

ஏற்கனவே இப்படத்திலிருந்து ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த ‘துணிவு’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அஜித் மாஸ் கிளாஸாக இருக்கும் இந்த டிரெய்லர் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்த டிரெய்லர் 2.33 நிமிடங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story