அஜித்தின் ‘துணிவு’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்... இன்று மாலை வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

thunivu

அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித்துடன மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து எச் வினோத் இயக்கி வரும் திரைப்படம் ‘துணிவு’. போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். 

thunivu

அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் பேட்ஜ் வெர்க் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் டப்பிங் பணிகளும் வேகமாக நடக்கிறது. இந்த பணிகளை இரவு பகலாக கவனித்து வருகிறார் எச் வினோத். 

இந்த படத்தை வரும் பொங்கலையொட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story