வலிமை படத்தில் அஜித்தின் பெயர் இதுதான்… லீக் ஆன தகவல்!

வலிமை படத்தில் அஜித்தின் பெயர் இதுதான்… லீக் ஆன தகவல்!

வலிமை படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் லீக் ஆனதை அடுத்து ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் ட்ரெண்டி ஆக்கி கொண்டாடி வருகின்றனர்.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படம் ரேஸிங்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. பல மாதங்களுக்குப் பிறகு அஜித் ஹைதராபாத்தில் நடந்து வரும் வலிமை படப்பிடிப்பில் கலந்து வருகிறார்.

வலிமை படத்தில் அஜித்தின் பெயர் இதுதான்… லீக் ஆன தகவல்!

தற்போது வலிமை படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் தெரிய வந்துள்ளது. இப்படத்தில் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி என்றும், ஐபிஎஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதையடுத்து ட்விட்டரில் #ஈஸ்வரமூர்த்திIPS என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதற்கிடையில் வினோத் இப்படத்தில் இடம் பெறவுள்ள பல ஸ்டண்ட் மற்றும் ரேஸிங் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க உள்ளார்.

Image

அஜித் – எச்.வினோத் கூட்டணி இரண்டாவதாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.போனி கபூர் தயாரிக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

Share this story