மாஸாக உருவாகும் ‘ஏகே 62’.. மிரட்ட வரும் அஜித் !

ak62

அஜித் நடிப்பில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு பிறகு விக்னேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். லைக்கா பிரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

ak62

இந்த படத்தில் அரவிந்தசாமி, சந்தானம் உள்ளிட்ட பல மொழி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இதுதவிர கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படம் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாம். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் அஜித்திற்கு மட்டும் 100 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. 

இந்த படம் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்றும், அதேநேரம் விக்னேஷ் சிவனின் வழக்கமான ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. அதில் நடிகர் சந்தானத்தின் கதாபாத்திரம் குறைந்த அளவு காமெடியுடன், பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டாக அஜித்திற்கு இந்த படம் இருக்கும். இந்த படத்தை மாஸாக கொண்டு வர அஜித்திடம் ரகசிய பேச்சுவார்த்தையும் நயன்தாரா நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story