மும்பையில் சொகுசு வீடு வாங்கிய ‘அக்ஷரா ஹாசன்’.

photo

நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் மும்பையில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

photo

அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான அக்ஷரா, தொடர்ந்து விவேகம், கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் கடைசியாக மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ளார். படம் இன்னும் வெளியாகவில்லை.

photo

இந்த நிலையில் அக்ஷரா மும்பையில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை, பாந்த்ராவில் 15 மாடி கொண்ட கட்டிடம் ஒன்றில் 13வது மாடியில் சுமார் 2,245 சதுர அடியில் மூன்று கார்கள் நிறுத்தும் வசதியுடன் ரூ.15.75 கோடிக்கு பிளாட் வாங்கியுள்ளராம் அக்ஷரா. இந்த தகவல் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

Share this story