“வெண்ணிலவு சாரல் நீ… அமரன் படத்தின் 2வது பாடல் ரிலீஸ்...!

amaran

அமரன் படத்தின் 2-வது பாடல் ‘வெண்ணிலவு சாரல்’ தற்போது வெளியாகி இருக்கிறது.இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

உண்மைக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ கடந்த வாரம் வெளியானது. தற்போதுவரை இப்பாடல் இணையத்தில் டிரெண்டில் உள்ளது. மெலடியில் கலக்கிய ஜிவி தனது 700வது பாடலின் மூலம் அனைவரது மனதையும் கட்டி இழுத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வெண்ணிலவு சாரல்’ லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இப்பாடலும் அனைவரது மனதையும் கவர்ந்து வருகிறது. யுகபாரதி வரிகளில் வெண்ணிலவு சாரல் பாடலை கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர்.

Share this story