நிறைவடைந்தது ‘அண்ணாத்த’ ஷூட்டிங். சென்னை திரும்பும் ரஜினி!

நிறைவடைந்தது ‘அண்ணாத்த’ ஷூட்டிங்.  சென்னை திரும்பும் ரஜினி!

‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததால் நாளை நடிகர் ரஜினி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிறைவடைந்தது ‘அண்ணாத்த’ ஷூட்டிங்.  சென்னை திரும்பும் ரஜினி!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம்  ‘அண்ணாத்த’ . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. டி. இமான் இசையில் உருவாகும் இப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது.

நிறைவடைந்தது ‘அண்ணாத்த’ ஷூட்டிங்.  சென்னை திரும்பும் ரஜினி!

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. இதில் ரஜினி நடிக்க வேண்டிய முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. அதன்பிறகு ரஜினியுடன் நயன்தாரா நடிக்கும் காட்சியும் படமாக்கப்பட்டது. கொரானா காலம் என்பதால் இந்த ஷூட்டிங்கை மிகவும் பாதுகாப்பாக நடத்தி முடித்துள்ளனர் படக்குழுவினர்.

நிறைவடைந்தது ‘அண்ணாத்த’ ஷூட்டிங்.  சென்னை திரும்பும் ரஜினி!

இந்நிலையில் ஐதராபாத்தில் நடக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இன்றுடன் நிறைவுபெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நாளை ரஜினி சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு டப்பிங் பணிகளை துவங்கும் ரஜினி, அதை முடித்துவிட்டு அடுத்த மாத துவங்கத்தில் தனது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். இன்னும் 20 நாட்கள் மட்டும் இந்த படத்தின் ஷூட்டிங் மீதி இருக்கிறது. விரைவில் அதை முடிக்க படக்குழு கொல்கத்தா செல்ல உள்ளது. இதற்கிடையே இந்த படத்தை திட்டமிட்டப்படி வெளியிட வேண்டும் என்பதால் ஒரிரு நாட்களில் போஸ்ட் பிரொக்ஷன் பணிகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Share this story