‘அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பினார் ரஜினி!

‘அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பினார் ரஜினி!

‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை திரும்பியுள்ளார்.

‘அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பினார் ரஜினி!

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்  ‘அண்ணாத்த’. கிராமத்து கதையம்சம் கொண்ட கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி. இமான் இசையில் உருவாகும் இப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது.

‘அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பினார் ரஜினி!

இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் ரஜினி நடிக்க வேண்டிய முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. கொரானாவின் 2வது அலை வேகமாக பரவி வரும் இந்நேரத்திலும் படக்குழுவினர் ஷூட்டிங்கை மிகவும் பாதுகாப்பாக நடத்தி வந்தனர். இறுதிக்கட்டத்தை அடைந்த இந்த ஷூட்டிங்கை நேற்றுடன் படக்குழுவினர் முடித்துள்ளனர்.

‘அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பினார் ரஜினி!

இதையடுத்து உடனடியாக போஸ்ட் பிரொக்ஷன் பணிகளும் தொடங்கவுள்ளது. இன்னும் இந்த படத்தில் சில காட்சிகள் மட்டுமே எடுக்கவேண்டிய நிலையில், அதற்காக விரைவில் கொல்கத்தா செல்லவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஷூட்டிங்கை முடித்து நடிகர் ரஜினி இன்று காலை சென்னை திரும்பினார். சில நாட்கள் ஓய்வு பிறகு டப்பிங் பணிகளை துவங்க உள்ளார். இந்த பணிகளை மே மாத இறுதிக்குள் முடித்துவிட்டு அடுத்த மாத துவக்கத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள குடும்பத்துடன் அமெரிக்கா செல்லவுள்ள கூறப்படுகிறது.

Share this story