“பாலிவுட்-ஐ திரையுலகை நினைத்தால் அருவருப்பாக உள்ளது : இயக்குனர் அனுராக் கஷ்யப்
![anurag](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/233fc30d1e6471b354e9836d0bf00efb.png)
மும்பையை விட்டு செல்ல விரும்புவதாக அனுராக் கஷ்யப் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி, அதில் வெற்றியும் கண்டவர் அனுராக் கஷ்யப். தற்போது அவருடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இப்போது பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் திரையுலகம் செயல்பாட்டு முறை குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் அனுராக் கஷ்யப். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “செலவு என்று வரும்போது எனக்கு வெளியே சென்று புதியதொரு கதையை பரிசோதிப்பது கடினமாக இருக்கிறது. இது என்னுடைய தயாரிப்பாளர்களை லாபம் மற்றும் தொகைகளை பற்றி சிந்திக்க வைக்கிறது.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அது எப்படி விற்கும் என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். அதனால் படப்பிடிப்பின் மகிழ்ச்சி உறிஞ்சப்பட்டு விடுகிறது.அதனால்தான், அடுத்த வருடம் மும்பையை விட்டு நான் தென்னிந்தியாவுக்குச் செல்ல விரும்புகிறேன். நான் உத்வேகம் எங்கு கிடைக்கிறதோ, அங்கு செல்ல விரும்புகிறேன்.மலையாளத்தில் கடந்த ஆண்டு `மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற படம் வெளியானது. அது போன்ற ஒரு படம் ஹிந்தியில் வருமா என்று கேட்டால் நிச்சயமாக வராது. ஆனால், அந்த படத்தை வாங்கி ரீமேக் மட்டும் செய்வார்கள். புதிதாக முயற்சி செய்து பார்க்கலாம் என்கிற எண்ணம் ஒரு துளி கூட இங்கு கிடையாது. மக்களுக்கு ஏற்கெனவே பிடித்த விஷயங்களை வைத்து திரைப்படத்தை தொடர்ந்து எடுக்கிறார்கள். எனவே, நான் இந்த ஆண்டு மும்பையில் இருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க விரும்புகிறேன்” எனவும் அனுராக் காஷ்யப் வேதனையுடன் பேசியுள்ளார்.
நான் எனது சொந்த சினிமா துறை மீதே அதிருப்தியும் அருவருப்பும் கொண்டிருக்கிறேன். அதேபோல், சினிமா உலகின் மனநிலையிலும் எனக்கு மொத்தமாக வெறுப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார் அனுராக் கஷ்யப்.