இந்தியன் 2-வில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை? இதுதான் காரணம்..!

11

1996ல் வெளியான இந்தியன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இப்போது வரையும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் பாடல்களில் அனிருத்தின் இசை தரமாக இல்லை என ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். 

இதனால், இந்தியன் படத்தின் பாடல்களையும், தீம் மியூசிக்கையும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து, அனிருத்தை கலாய்த்து வந்தனர். இந்தியன் 2ம் பாகத்துக்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தால், இந்தப் படமே வேற லெவலில் வந்திருக்கும் எனவும் கமெண்ட்ஸில் ஷங்கரை பங்கம் செய்து வந்தனர். அதேபோல், மலேஷியாவில் நடைபெற்ற இந்தியன் 2 ப்ரோமோஷனில், ஏன் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவில்லை, அனிருத்தின் மியூசிக் உங்களுக்கு பிடித்துள்ளதா என ரசிகை ஒருவர் கமலிடமே கேள்வி எழுப்பினார். இதற்கு கொஞ்சம் காட்டமாக பதில் சொன்ன கமல், இதெல்லாம் இயக்குநர் ஷங்கரிடம் கேட்க வேண்டிய கேள்வி என மெர்சல் காட்டினார். 

இந்நிலையில், இதே கேள்வியை இயக்குநர் ஷங்கரிடம் கேட்கப்பட்டது. அதாவது இந்தியன் 2 படத்திற்கு ஏன் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவில்லை, அனிருத்தின் இசை விமர்சனத்திற்குள்ளாகியுள்ளதே என கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த இயக்குநர் ஷங்கர், ரஜினியின் 2.O படம் முடியும் போது இந்தியன் 2 கதையை ஓகே செய்துவிட்டோம். அப்போது 2.O கிராபிக்ஸ் ஒர்க் முடிய ஒரு வருடம் ஆகும் என்பதால், ஏஆர் ரஹ்மானும் அதுவரை பிஸியான மோடில் இருந்தார். அந்த நேரம் பார்த்து அவரிடம் இந்தியன் 2 படத்துக்கு பாடல்கள் கேட்டால், 2.O பின்னணி இசை வேலைகள் தாமதமாகிவிடும். அதனால் தான் இந்தியன் 2 படத்திற்கு அனிருத்தை கமிட் செய்தேன் என்றார்.அதுமட்டும் இல்லாமல் நான் எல்லோரது இசையையும் கேட்பேன் எனவும், யுவன், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் வேலை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறினார்.

Share this story