ரம்யா பாண்டியன் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் முரட்டு ரசிகர்!

ரம்யா பாண்டியன் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் முரட்டு ரசிகர்!

நடிகை ரம்யா பாண்டியனின் தீவிர ரசிகர் ஒருவர் அவரது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் முரட்டு ரசிகர்!

சினிமாவிற்கு உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தீவிர ரசிகர்களாக இருப்பர். அவர்கள் தங்கள் பேவரைட் திரை நட்சத்திரங்களின் மீதான தங்கள் அன்பை பல விதங்களில் வெளிப்படுத்துவர். இந்தியாவில் பெரிய அளவிலான கட்அவுட் வைப்பது, மாலையிடுவது, பாலாபிஷேகம் செய்வது போன்ற செயல்கள் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த திரை நட்சத்திரங்கள் மீதான அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கம் தமிழ்நாட்டில் சற்று அதிகமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றே கூறலாம்.

ரம்யா பாண்டியன் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் முரட்டு ரசிகர்!

தற்போது ரம்யா பாண்டியனின் மீது தீவிர அன்பு கொண்ட ரசிகர் ஒருவர் அவரது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்திற்குப் பிறகு சில காலமாக படவாய்ப்பு இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டார். அதையடுத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் இன்னும் அவரது புகழ் அதிகமானது. பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றது. தற்போது பல படங்களில் ரம்யா நடித்து வருகிறார்.

Share this story