பிரபல நடிகரின் மகனை மணக்கும் அர்ஜூனின் மகள்.. விரைவில் நடைபெறும் திருமணம் !

umapathy ramaiah and aishwarya arjun

 பிரபல நடிகரின் மகனை நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா மணக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அர்ஜூன். அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

umapathy ramaiah and aishwarya arjun

இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் போதிய வாய்ப்புகள் ஐஸ்வர்யாவிற்கு கிடைக்கவில்லை. அவரும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. இதற்கிடையே உமாபதி என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐஸ்வர்யா காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.

umapathy ramaiah and aishwarya arjun

உமாபதி, பிரபல காமெடி மற்றும் குணசித்திர நடிகராக இருக்கும் தம்பி ராமையாவின் மகன் ஆவார். தந்தையை போன்று அவரும் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தற்போது சொந்தமாக தொழில் ஒன்றை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

 

Share this story