அசோக் செல்வன் நடிக்கும் புதிய வெப் தொடரை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

அசோக் செல்வன் நடிக்கும் புதிய வெப் தொடரை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் கேங்ஸ் என்ற புதிய வெப் தொடரை, சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார். 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கத்தில், லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இதில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

அசோக் செல்வன் நடிக்கும் புதிய வெப் தொடரை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார். ரஜினிகாந்த, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை சவுந்தர்யா இயக்கி இருந்தார். அதனை அடுத்து தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தை இயக்கினார். தற்போது வெப் தொடர் ஒன்றை பிரபல ஓ.டி.டி தளமான  அமேசான் ப்ரைமுடன் இணைந்து கேங்ஸ் என்ற தொடரை தயாரிக்கிறார். அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் இந்த தொடரை நோவா ஆபிரகாம் என்பவர் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

Share this story