பெண் குழந்தைக்கு தாயான விஜய் பட நடிகை... ரசிகர்கள் வாழ்த்து !

bibasha basu

தாயான பிரபல பாலிவுட் நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

பாலிவுட் பிரபல நடிகையாக இருப்பவர் பிபாசா பாசு. இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். 

bibasha basu

 பாலிவுட்டில் பிசியான நடிகையான அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் கரண் சிங் கரோவேர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை பிபாசா பாசு அறிவித்திருந்தார். இந்நிலையில் கரண் சிங் - பிபாசா ஜோடிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையொட்டி ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

Share this story