பாண்டிராஜ் சாரின் படம் எந்த ஜானரில் வரும் என்றே சொல்ல முடியாது :நித்யா மேனன்

nithyamenon

நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராவார் அந்த வகையில் வெப்பம், ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து தேசிய விருதினையும் வென்றுள்ளார். அடுத்தது இவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து ஜெயம் ரவியும் நடித்துள்ளார். இந்த படமானது வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இயக்குனர் பாண்டிராஜின் படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்து வருகிறார். 


இந்நிலையில் நித்யா மேனன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், அவர் அடுத்தடுத்து நடித்து வரும் படங்கள் குறித்து விவரித்து பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “இட்லி கடை திரைப்படம் காதலிக்க நேரமில்லை படத்திற்கு அப்படியே எதிர்மறையாக இருக்கும். அதிலும் என்னுடைய கதாபாத்திரம் உங்களுக்கு எதிர்பாராததாக இருக்கும். என்னை அந்த மாதிரியான கேரக்டரில் நீங்கள் கற்பனை கூட செய்த பார்த்திருக்க மாட்டீர்கள். இட்லி கடை படம் மிகவும் உணர்வுபூர்வமாகவும் எமோஷனலாகவும் இருக்கும். இப்படம் உங்களை கண்கலங்க வைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


விஜய் சேதுபதி உடன் நடிக்கும் படம் குறித்து பேசுகையில், அந்த படம் எந்த ஜானர் என்றே சொல்ல முடியாது, காதல், நகைச்சுவை என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும், குடும்ப பின்னணி சார்ந்த கதையாக இருக்கும் என் தெரிவித்துள்ளார். 

Share this story