குக் வித் கோமாளி புகழுக்கு பெண் குழந்தை பிறந்தது

குக் வித் கோமாளி புகழுக்கு பெண் குழந்தை பிறந்தது

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

குக் வித் கோமாளி புகழுக்கு பெண் குழந்தை பிறந்தது

குக் வித் கோமாளி உள்ளிட்ட விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கி வந்த புகழ் சிக்ஸர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் காமெடியனாக அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து தாதா 87, காக்டெயில், சபாபதி, என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை, ஏஜென்ட் கண்ணாயிரம், காசேதான் கடவுளடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி புகழுக்கு பெண் குழந்தை பிறந்தது

கடந்த ஆண்டு தனது காதலியான பென்ஸியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட புகழ் விரைவில் அப்பாவாகப் போகிறேன் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். இந்நிலையில், இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மகாராணி வந்துவிட்டாள் என மகிழ்ச்சியாக இதனை அவர் பதிவிட்டுள்ளார். 

Share this story