ஏ.ஆர்.ரகுமானுடன் மியூசிக் கம்போசிக்.. ‘D50’ -க்காக பரபரப்பாக இயங்கும் தனுஷ் !

d50

தனது 50வது படத்தின் பணிகளுக்காக நடிகர் தனுஷ், ஏ.ஆர்.ரகுமானுடன் பணியாற்றும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பன்முக திறமைக் கொண்டவர் நடிகர் தனுஷ். ‘பா.பாண்டி’ படத்திற்கு பிறகு தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு தனுஷ் மொட்டை தலையுடன் வெறித்தனமான லுக்குடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.  முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். 

d50

சமீபத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில்  தொடங்கியது. அங்கு 500 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் எஸ்ஜே சூர்யா மற்றும் சுதீப் கிஷின் இணைந்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தனுஷ் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. 

அதேநேரம் இந்த படத்திற்கான மியூசிக் கம்போசிங் பணிகளை இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான் தொடங்கியுள்ளார். அவருடன் இணைந்து நடிகர் தனுஷூம் அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் மொட்டை தலையுடன் மிரட்டலான மீசையுடன் இருக்கிறார். இதற்கிடையே இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் ஜூலை 27-ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

Share this story