கேம் சேஞ்சர் திரைப்படத்தின் Dhop பாடல் நாளை வெளியீடு
1734797467765
தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் தற்பொழுது நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் 4வது சிங்கிளான 'தொப் {Dhop}' பாடல் நாளை காலை 8.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளிட்டு அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.