தீர்க்கமான கருத்துகளை முன்வைத்த இயக்குனர் பா.ரஞ்சித் பிறந்தநாள்

ranjith

சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபு உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து அவருக்கு இயக்குனர் அந்தஸ்தை உயர்த்தியது. அப்படம் அவருக்கு எந்த அளவு வரவேற்பை கொடுத்துள்ளது என்றால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெரும் அளவிற்கு ஒரு முன்னணி இடத்திற்கு சென்றார்.

pa ranjith
ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தார். பா.இரஞ்சித் படங்களில் அடித்தட்டு மக்களின் வலியை ஆணித்தனமாக பேசி தீர்க்கமான கருத்துகளை முன்வைத்தார். அந்த வகையில், கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்நிலையில், இன்று தனது 42 - வது பிறந்தநாளை பா.இரஞ்சித் கொண்டாடுகிறார்.  அவருக்கு திரைப்பிரளங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Share this story