’96 பாகம் 2’ படப்பிடிப்பு எங்கு தெரியுமா ?

96

விஜய் சேதுபதி, திரிஷாவின் 96 பாகம் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் 96 எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை பிரேம்குமார் இயக்கி இருந்தார். அழகான காதல் கதையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம்பெறும் படங்களுக்கு மத்தியில் மென்மையான காதல் படத்தை தந்திருந்தார் பிரேம்குமார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கண்ணியமான காதலனாக நடித்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். அதே சமயம் அவருக்கு ஈடுகொடுக்கும் விதமாக தனது கண்களிலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார் திரிஷா. அந்த வகையில் ராம் – ஜானு என்ற பெயர்கள் இன்றுவரையிலும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.

96

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே 96 படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக மெய்யழகன் படத்தை முடித்த பிரேம்குமாரும் 96 பாகம் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் 96 பாகம் 2 படம் தொடர்பான புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் அதே எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

Share this story