Fan Tribute.... AK Anthem வீடியோ வெளியிட்ட விடாமுயற்சி படக்குழு

ak

ரசிகர்களுக்காக AK Anthem என்ற வீடியோவை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ளது. 


நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம்
"விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி உள்ளது. இப்படத்தின் டிரெய்லர், பிடிஎஸ் வீடியோக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.ak


இதனை தொடர்ந்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நாளை (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. நாளை 'விடாமுயற்சி' வெளியாவதை அடுத்து படத்தின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
'விடாமுயற்சி' நாளை வெளியாகும் நிலையில் படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.


இதனை தொடர்ந்து, அஜித் கார் ரேசிஸில் ஈடுபடும் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள AK Anthem வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் மாஸாக எண்ட்ரி கொடுக்கும் அஜித் பந்தய களத்தில் இருந்த காட்சிகளின் அனிமேஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சந்தோஷம், ஆக்ரோஷம் என எமோஷன்கள் நிறைந்த வீடியோவில் தீ தெறிக்கும் Anthcm பாடலை பின்னணியாக கொண்டிருக்கிறது. அஜித் குமாரின் மாஸ் புகைப்படங்கள், அனிமேஷன் காட்சி மற்றும் Anthem பாடல் அடங்கிய வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
 

Share this story