தடைகளை தகர்த்து எறிந்து திரைக்கு வரும் கங்குவா: ரிலீசுக்கு தயாரான படக்குழு..

kanguva

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலான வெற்றியை பெற்றது. இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’.மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும், 3டி தொழில் நுட்பத்திலும் உருவாகியுள்ளது. இந்தப் படம் கோவா, சென்னை மற்றும் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

kanguva
இத்திரைப்படத்தில், நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா திரைப்படம் வரும் நவ 14ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழு பட ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளனர். அந்தவகையில், ரிலீஸ்-க்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில்  இப்பட வெளியீட்டை எதிர்த்து ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், கடந்த வாரம் அந்நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மீதித் தொகையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்தியது. அதனால், படத்திற்கு எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. 


மேலும்,  'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பாக செலுத்த வேண்டிய ஒரு கோடி ரூபாயை செலுத்தவில்லை என மீண்டும் சொத்தாட்சியர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நவம்பர் 13ம் தேதிக்குள் 20 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும், அதை செலுத்தாமல் படத்தைத் திரையிடக் கூடாது  என உத்தரவிட்டனர். இந்நிலையில், கங்குவா படத்தின் பிரதிகள் அனைத்து மொழிகளிலும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருப்பதாக அப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், இயக்குனர் சிவா உடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கங்குவா வெளியீட்டிற்கு ஏற்பட்டுள்ள தடைகளை படக்குழு சரி செய்துள்ளதாக தெரிகிறது. 


 

Share this story