திருமணத்திற்கு ரெடியாகிவிட்டாங்க... ரொமான்டிக் லுக்கில் கெளதம் கார்த்திக் - மஞ்சிமா ஜோடி !

gautham karthik and manjima

கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா ஜோடி ரொமான்டிக் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

gautham karthik and manjima

 பிரபல நடிகர் கார்த்தியின் மகனாக கௌதம் கார்த்திக், தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருகிறார். மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

gautham karthik and manjima

தற்போது சிம்புடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே 'தேவராட்டம்' படத்தில் நடித்தபோது பிரபல மலையாள நடிகை மஞ்சிமா மோகனுடன் கெளதம் கார்த்திக்கு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செய்திகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வந்தது. ஆனால் இருவரும் தங்களது உறவை வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை.

gautham karthik and manjima

இந்நிலையில் ரொமாண்டிக் லுக்கில் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது இவர்களது காதலை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. அதேநேரம் இவர்கள் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. அதனால் இது திருமணத்திற்கான சமிக்ஞையே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

gautham karthik and manjima

Share this story