சைக்கோ த்ரில்லரில் உருவாகியுள்ள ‘ஹிட்லிஸ்ட்’... மிரட்டலான டீசர் வெளியீடு !

hit list

 விஜய் கனிஷ்கா மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

முன்னணி இயக்குனரான விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஹிட்லிஸ்ட்’. இந்த படத்தில் விஜய் கனிஷ்காவுடன் இணைந்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கௌதம் மேனன், சமுத்திரகனி, சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரன், அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

hit list

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சூர்யகதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இந்த படத்தை இயக்கி வருகின்றனர். தெனாலி, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களுக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

hit list

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சைக்கோ த்ரில்லரில உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மிரட்டலாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story