பன்முக கலைஞர் கங்கை அமரன் பிறந்தநாள் : இளையராஜா வாழ்த்து
இளையராஜா போன்ற மாபெரும் கலைஞனின் தம்பி என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய கங்கை அமரன் இன்று அவரது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.சினிமாத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சாதிக்கும் போது அதில் மூத்தவராக இருப்பவருக்கே அது அதிகமாக சேரும். அதில் சிக்கிய ஒரு கலைஞர் தான் கங்கை அமரன், இவர் இசைஞானி இளையராஜாவின் இளைய சகோதரர் ஆவார். இந்த அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்த இவருக்கு தற்போது திரைப்பட இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற பல அடையாளங்கள் உள்ளன. இவர் இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி ஆகியோரின் தந்தையும் ஆவார். இளையராஜா போன்ற மாபெரும் கலைஞனின் தம்பி என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவக்கிய கங்கை அமரன் இன்று அவரது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அதையொட்டி, அண்ணன் இளையராஜாவை சந்தித்த கங்கை அமரன் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார், இதுதொடர்பான புகைப்படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.