இந்தியன் 2 படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம்

இந்தியன் 2 படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம்

இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் இந்தியன். 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்தியன் படத்தின் முதல் பாகத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்த நிலையில், 2-ம் பாகத்தினையும் அவரே கமல்ஹாசனை வைத்து இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கிய சிறிது நாட்களிலேயே விபத்து உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. பின்னர், விக்ரம் பட வெளியீட்டுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. லைகா மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், அனிருத் இசையில் இப்படம் உருவாகிறது. படத்தில் கமல்ஹாசன் தவிர  சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகளில் ஏற்பட்ட இழுபறி காரணாக படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி படம் வெளியாகும் என தெரிகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Share this story