இன்று வெளியாகும் இந்தியன் 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி..!
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் துவங்கும். இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு சிறப்பு காட்சியை திரையிட அனுமதி அளிக்குமாறு தமிழக அரசுக்கு லைகா நிறுவனம் கடிதம் எழுதியது.
இதையடுத்து இன்று ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சி வைத்துக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. நாளை அனைத்து தியேட்டர்களிலும் கூடுதலாக ஒரு காட்சியை திரையிடலாம். காலை 9 மணிக்கு துவங்கி இரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.