சுசீந்திரன்- ஜெய் கூட்டணியின் ‘குற்றமே குற்றம்’… நேரடியாக ஓடிடி ரிலீஸ்!

சுசீந்திரன்- ஜெய் கூட்டணியின் ‘குற்றமே குற்றம்’… நேரடியாக ஓடிடி ரிலீஸ்!

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள ‘குற்றமே குற்றம்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெய் கடைசியாக ‘ட்ரிபிள்ஸ்’ என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதில் வாணி போஜன் அவருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். இதற்கிடையில், எண்ணி துணிக, பிரேக்கிங் நியூஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

சுசீந்திரன்- ஜெய் கூட்டணியின் ‘குற்றமே குற்றம்’… நேரடியாக ஓடிடி ரிலீஸ்!

ஜெய் தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் குற்றமே குற்றம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் திவ்யா துரைசாமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, ஸ்ம்ருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை Axess Film Factory நிறுவனம் தயாரித்துள்ளனர்.

தற்போது இந்தப் படம் நேரடியாக Zee5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை அடுத்தும் ஜெய் சுசீந்திரன் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story