ஜெய் நடித்துள்ள பேபி & பேபி படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் ஜெய் நடித்துள்ள பேபி& பேபி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பிரதாப் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் இரண்டு குழந்தைகள் இரு குடும்பங்கள் இடையே மாறுவது அதனால் ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற காட்சிகள் டிரெய்லரின் இடம் பெற்றுள்ளது.