ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘வரலாறு முக்கியம்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

VaralaruMukkiyam

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

காதல் மற்றும் காமெடி கதைக்களங்களில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதே பாணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வரலாறு முக்கியம்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார்.

VaralaruMukkiyam

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் RB சௌத்ரி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு புகழ் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருந்து வந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story