மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கர்ணன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கர்ணன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கர்ணன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கும் தேதி வெளியாகியுள்ளது.

தனுஷ் – மாரி செல்வராஜின் மிரட்டலான காம்போவில் வெளியான கர்ணன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. படத்திற்கு பெரும்பாலும் நேர்மறை விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்களே கிடைத்தன. மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனர் என்பதை ‘கர்ணன்’ படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கர்ணன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய கர்ணன் திரைப்படம் ஓடிடி-யில் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அதிகமாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பின்னர் கர்ணன் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது கர்ணன் ஓடிடி ரிலீஸ் தேதி தெரிய வந்துள்ளது. மே 13-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் கர்ணன் திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மீண்டும் மாரி செல்வராஜ்- தனுஷ் கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story