கவின் நடிப்பில் உருவாகும் 'மாஸ்க்' படத்தின் ரிலீஸ் அப்டேட்

kavin

கவின் நடித்துள்ள 'மாஸ்க்' படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பிளடி பெக்கர்’. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கிடையில் இவர், அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மாஸ்க்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.kavin
 
இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இப்படம் தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வருகிற மே மாதம் திரையிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story